Thursday, April 2, 2015

tsu ஒரு விளக்கம்

tsu   சமூக வலைதளம் பற்றி….
tsu.co  என்ற சமூக வலைதளம் தற்போது வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. Facebook  போன்ற இந்த வலைதளம் கடந்த ஒரே மாதத்தில்             லட்சக்கணக்கானவர்கள் இணைந்துள்ளார்கள். அப்படியென்ன இதில் விசேஷம் என்றால் முகப்புத்தகத்தில் நாம் பதிவு செய்யும் பதிவுகளுக்கு நண்பர்களிடமிருந்துலைக்மட்டுமதான் வரும். சில சமயம் அதுகூட கிடைக்காது. ஆனால் இந்த தளத்தில் நாம் பதிவிடும் பதிவுகளுக்கும் சரி பகிரப்படும் பதிவுகளுக்கும் நமக்கு வருவாய் உண்டு என்பதுதான். ஆம், நண்பர்களே! முகப் புத்தகத்திலிருந்து tsu  வேறுபடுவது இதில்தான். tsu தளத்தில் பதிவிடுபவர்களுக்கு அவர்களது பங்களிப்பிற்கேற்ப தங்களது வருவாயிலிருந்து 90 சதவிகிதத்தினை பிரித்து அளிக்கிறது இந்நிறுவனம். இதில் எப்படி சேருவது என்பது பற்றி விவரமாக இனி காண்போம்.
tsu.co வலைதளத்தில் புதிதாக பதிவு செய்ய ஏற்கனவே பதிவு செய்துள்ள ஒருவரின் ஐடி மூலமாகத்தான் உள் நுழையமுடியும். உதாரணத்திற்கு எனது ஐடி http://www.tsu.co/sakthivel63  இந்த லிங்கின் மூலம் நீங்கள் tsu தளத்திற்குச் சென்று உங்களுடைய கணக்கினை துவங்க வேண்டும். புதியதாக பயனீட்டுச் சொல் மற்றும் பாஸ்வேர்டை கொடுத்து உள்நுழைந்து உங்களுக்கென்று புதிய லாகின் ஐடி யை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
என்னிடம் கணினி இல்லை என்பவர்களுக்கு ஆன்டிராய்டு போன் வைத்திருந்தாலே இந்த வலைதளத்தினை பயன்படுத்தலாம். ஆன்டிராய்டு  ப்ளே ஸ்டோரில் இந்த tsu ஆப்ளிகேசனை இலவசமாக டவுன் லோடு செய்து கொள்ளலாம்.
உங்களுக்கென லாகின் ஐடியை உருவாக்கிக் கொண்ட பின்பு  முகப்புத்தகத்தில் ஏற்கனவே தாங்கள் செய்து வருவதைப் போன்று உங்களுக்குப் பிடித்த பதிவுகளை பதிவிடலாம். முகப்புத்தகத்தில் உங்களின் பதிவுகளுக்கு லைக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் இந்த tsu  வலைதளத்தில் லைக் வாங்குவது மிக மிக முக்கியம். லைக் வாங்குவதோடு பதிவுகளுக்கு நண்பர்களிடமிருந்து அந்த பதிவிற்கு கமெண்ட் வாங்குவதும் முக்கியம். ஏனென்றால் ஒவ்வொரு லைக்கிற்கும் கமெண்டிற்கும் நமது கணக்கில் வருவாயாக வரும் என்பதால் இது மிக முக்கியமானது. லைக்கும் கமெண்டும் எப்படி வாங்குவது என்ற கவலையே உங்களுக்கு வேண்டாம். காரணம் உங்களுக்கு உங்களது நண்பர்களுக்கு லைக்கும் கமெண்டும் எவ்வாறு முக்கியமோ அதைப்போன்று நீங்கள் அளிக்கும் லைக்கும் கமெண்டும் அவர்களுக்கு முக்கியம் என்பதால் இதில்  give and take பாலிசியினால் நாமும் தாரளமாக லைக் கமெண்ட் அளிக்கலாம் அதைப்போன்று அவர்களும் லைக்கும் கமெண்டும் தாரளமாக அளிப்பார்கள்.   
சரி tsu வின் விதிமுறைகளைப் பற்றி பார்ப்போமா? (தற்போதுள்ள விதிகள் இவை நிறுவனத்தின் மாற்றத்திற்குட்பட்டது)
ஒரு நாளைக்கு நீங்கள் 27 புதிய பதிவுகளை பதிவிடலாம்.
ஒரு நாளைக்கு நீங்கள் 8 நண்பர்களின் பதிவுகளை உங்களது பக்கத்தில் பகிரலாம்.
ஒரு நாளைக்கு நீங்கள் 1000 பதிவுகளுக்குலைக்அளிக்கலாம்.
ஒரு வாரத்தில் நீங்கள் 50 புதிய நண்பர்களை சேர்க்கலாம்.

(இது தொடர்பாக பல சந்தேகங்கள் எழுகின்றது என்பதால் இது தொடர்பான விவரமான விளக்கம்)
புதிய நண்பர்களை சேர்க்க ஒரு வாரத்திற்கு 50 பேர் என்ற கணக்கு வாரம் முழுமைக்கும் கிடையாது. நீங்கள் இன்று 50 புதிய நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கின்றீர்கள் என்றால் அதில் இன்றே 40 நண்பர்கள் உங்களுடன் இணைந்து விட்டார்கள் என்றால் தற்போது நிலுவையிருப்பது 10 நண்பர்கள் என்று வைத்துக் கொண்டால் 50 ல் 10 பேர் கழித்துக் கொண்டு மீதமுள்ள 40 பேருக்கு நீங்கள் புதிய நண்பர்களுக்கு இன்றே மறுபடியும் அழைப்பு விடுக்கலாம். எத்தனை பேருக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்று கணக்கு வைத்துக் கொண்டு அழைப்பு விடுக்க வேண்டுமா என்றால் அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் அழைப்பு விடுத்துக் கொண்டேயிருங்கள் 50 பேர் ஆனவுடன் அதுவாகவே நீங்கள் 50 பேரை சேர்த்துவிட்டீர்கள் என்ற தகவல் கூறிவிடும் என்பதால் இதில் சிரமம் ஒன்றுமில்லை 
மொத்தமாக கணக்கில் கொண்டால் நீங்கள அதிகபட்சமாக 5000 நண்பர்களை சேர்த்துக் கொள்ளலாம்.
அதைப் போன்று 1000 நண்பர்களை நீங்கள் பின் தொடரலாம். (Followers)

சரி இதுமட்டும் போதுமா இந்த தளத்தில் வருவாய் ஈட்ட? என்றால் போதாது. நண்பர்களை சேர்ப்பதில் உங்களுக்கு சிரமம் அதிகம் இருக்காது. ஏனென்றால் நீங்கள் சேர்க்காவிட்டாலும் அவர்களாக உங்களை நண்பராக சேர்க்க விண்ணப்பிக்கும் போது நீங்கள் ஒத்துக் கொண்டால் அதாவது அக்சப்ட் (Accept)  கொடுத்தால் போதுமானது. ஆனால் அதைவிட முக்கியமானது உங்களுக்கு கீழே நிறைய நபர்களை (நண்பர்களை) சேர்க்க வேண்டும். அவர்களை எப்படி சேர்ப்பது என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதற்கும் எளிய முறை உங்களின் முகப்புத்தக நண்பர்களுக்கும் மற்றும் உங்களின் வாட்ஸ்அப் நண்பர்களுக்கும் உங்களின் tsu ஐடி ( இந்த ஐடியை அறிய நீங்கள் tsu வில் கணக்குத் துவங்கியதும் அதன் முகப்பு பக்கத்தில் இடது பக்கத்தில் உங்களது லாகின் பெயர் தெரியும் அதனை கிளிக் செய்தால் tsu வின் முகவரி உள்ள இடத்தில் (address bar-ல்) உள்ள tsu.co/உங்களது லாகின் பெயர். இதுதான் உங்களின் ஐடி. இதனை உங்கள் நண்பர்களிடம் கொடுத்து புதிதாக   வந்துள்ள இந்த tsu பற்றிக்கூறி அவர்களை இதில் சேரும்படி கேட்டுக் கொண்டு அவர்களை சேர்க்க வேண்டும். அவர்கள் tsu வின் படி உங்களின் சில்ரன் என்று அழைக்கப்பவார்கள். இவர்கள் உங்களைப்போல பதிவுகளை மேற்க் கொண்டு வருவாய் ஈட்டும் போது அவர்களின் வருவாயில் 30 சதவிகிதம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். அதாவது அவர்களின் கணக்கில் 3 டாலர்கள் சேர்ந்தால் உங்களது கணக்கில் 1 டாலர் சேர்க்கப்படும். அதைப்போன்று உங்களால் சேரக்கப்பட்டவர்கள் அதாவது உங்கள் சில்ரன் அவர்களது ஐடி மூலமாக சேர்ப்பவர்கள் அவர்களுக்கு சில்ரன் ஆனால் உங்களுக்கு அவர்கள் கிராண்ட சில்ரன். அவர்களது வருவாயிலும் உங்களுக்கு 10 சதவிகிதம் கிடைக்கும். உங்களது பதிவுகளால் கிடைக்கும் வருவாயுடன் இதுவும் சேர்ந்து வரும். நீங்கள் உங்களுக்கு கீழ் நண்பர்களைச் சேர்க்க சேர்க்க உங்களுக்கு நல்லதுதான்.
இந்த தளத்தில் சேர்ந்தவுடனே தொகையை எதிர்பார்ப்பது என்பது திருமணம் ஆனவுடன் குழந்தையை எதிர்பார்ப்பது போன்று நடக்க இயலாத ஒன்று. காத்திருத்தலும் சரியான முறையில் பதிவுகளை பதிவிடுவதும் முக்கியமானது. பதிவுகளுக்கான புகைப்படங்களை இணைத்தில் ஆயிரக்கணக்கில் கொட்டிக்கிடக்கின்றன. ஒருநாளில் சில மணித்துளிகள் செலவிட்டு நிறைய படங்களை சேமித்துக் கொண்டால் பல நாட்களுக்கு அதனை பதிவிட்டுக் கொள்ளலாம். ஏனெனில் நாம் ஒரு நாளைக்கு 27 பதிவுகள் மட்டும்தான் பதிவு செய்யப் போகிறோம்.
உங்களுக்கு 500 நண்பர்கள் சேர்ந்து விட்டார்கள் என்றால் தினமும் உங்களுக்கென உரிய பதிவுகளை முறையாக பதிவு செய்து விடுங்கள். நீங்கள் சேர்க்கும் உங்களின் நண்பர்களின் சந்தேகங்களை தீர்த்து அவர்களுக்கு பதிவு செய்ய உதவிடுங்கள். அவர்களையும் நிறைய நண்பர்களை  சேர்க்க கூறுங்கள். சரியான முறையில் இதனை தொடர்ந்து செய்து வந்தால் மூன்று முதல் ஐந்து மாதங்களுக்குப் பிறகு நமக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவில் வருவாய் கிட்டும்.
இதில் நாம் சரியாக மேற்க்கொள்ள வேண்டியது நமக்கு லைக் வர நமது நண்பர்களுக்கு நாம் விடாமல் லைக் கொடுத்துக் கொண்டே வந்தால் அவர்களும் நமக்கு லைக் கொடுத்துக் கொண்டே வருவார்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த படங்களுக்கு கமெண்டும் கொடுங்கள். கமெண்ட் பகுதியில் அவர்களது படத்திற்கு லைக் கொடுத்து விட்டு எனது பக்கத்திற்கு வந்து பாருங்கள் என்று வேண்டுகோள் வையுங்கள் ஒரு 5 நண்பர்களுக்கு ஒரு நாளைக்கு வேண்டுகோள் விடுத்தால் 3 பேராவது நமது பக்கத்திற்கு வந்து லைக், கமெண்ட் மற்றும் நமது படத்தை அவர்களது பக்கத்திற்கு பகிர்ந்தும் கொள்வார்கள். நாமும் இதுபோன்ற வேண்டுகோள்களை ஏற்று அவர்களது பக்கத்திற்குச் சென்று நாமும் அவர்களது பதிவுகளுக்கு லைக், கமெண்ட் போடுவதோடு நம்மை அசரவைக்கும் அவர்களது பதிவுகளை நாமும் நமது பக்கத்திற்கு பகிர்ந்து கொள்ளலாம்.
நண்பர்களை சேர்ப்பதில் பாரபட்சம் வேண்டாம். காரணம் நிறைய பதிவுகள் வெறும் படமாக இருப்பதால் இதற்கு மொழி நாடு என்று எதுவும் தேவையில்லை. நிறைய நாட்டு மக்கள் நம்மை நண்பர்களாக்க கோரும் போது சேர்த்துக் கொள்ளுங்கள். உலகளாவிய இணையதளம் என்பதாலும் இதன் வருவாய் டாலரில் அளிக்கப்படுகிறது என்பதாலும் இதில் நிறைய வெளிநாட்டுக்காரர்கள் இருக்கிறார்கள். தயங்காமல் அனைவரையும் நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். நமக்குத் தேவை லைக்கும் கமெண்டும் தான். சில நண்பர்களின் பதிவுகள் ஆபாச படங்கள் இருந்தால் அவர்களை நண்பர்கள் பட்டியலிலிருந்து எடுத்துவிடுங்கள். இதில் சிரமம் எதுவுமில்லை. Friend  என்ற காலத்தை க்ளிக் செய்தாலே அவர் unfriend  ஆகிவிடுவார். அதற்குப் பிறகு அவரது பதிவுகள் உங்களது பக்கத்தில் பதிவாகாது. சிலர் உங்களை தொடர்வார்கள் அவர்களையும் வேண்டாம் என்றால் இதைப்போன்று நீக்கிவிடலாம்.
நீங்கள் சேர்ந்து ஐந்து நாட்களில் உங்களது பங்கேற்பிற்கேற்ப உங்களது கணக்கில் 0.02 அல்லது 0.05 என்று தொகை சேரும். அதனைப் பார்த்து இவ்வளவுதானா? என்று சோர்ந்து போகாமல் முகப்புத்தகத்தில் இருப்பது போல செயல்படுங்கள் சில வாரங்களுக்குப் பிறகு உங்களின் பங்களிப்பிற்கேற்ற தொகை உங்கள் கணக்கில் வரவாகலாம்.
சரி கஷ்டப்பட்டு இதையெல்லாம் செய்து நம்மை ஏமாற்றி விட்டு போய்விட்டால் என்ற சந்தேகம் வேண்டாம். இதில் நமக்கு இழப்பு என்று எதுவுமில்லை. ஏனென்றால் இதில் எந்தவிதமான முதலீடும் நாம் போடவில்லை. எப்போதும் முகப்புத்தகத்தில் செலவழிக்கும் இன்டர்நெட்டை இந்த தளத்தில் செலவழிக்கிறோம். அவ்வளவுதான். இதில் தொகை வராவிட்டால் என்றால் இழந்தது இன்டர் நெட்டிற்கான தொகைதான் அதுவும் இந்த தளம் இல்லையென்றால் இன்னொரு தளத்தில் அதனை வீணடித்திருப்போம் என்பதால் நம்பிக்கையுடன் செயல்படுவோம்.
இதில் பதிவிடும் படங்கள் உண்மையில் அசர வைக்கின்றன. இதைப்போன்ற படங்களை நாம் வேறு எங்கு தேடினாலும் கிடைக்காது. இந்த உண்மையை நீங்கள் இந்த தளத்திற்குச் சென்ற மூன்று நான்கு நாடகளிலேயே உணருவீர்கள். உங்களுக்கு வாட்ஸ்அப் பில் வரும் படங்களையும் செய்திகளையும் அப்படியோ மொபைல் மூலம் இந்த தளத்தில் பதிவிடலாம் என்பது கூடுதல் வசதிமுகப்புத்தகத்தில் செலவிடும் நேரத்தை இதில் செலவிட்டால் நிறைய அயல்நாட்டு நண்பர்கள் கிடைப்பதோடு மனதிற்கு நிறைவான நிறைய செய்திகளையும் படங்களையும் பார்ப்பதோடு வருவாயும் கிடைக்கிறது அதோடு நிறைய புதுப்புது விஷயங்களையும் அறிந்து கொள்ளலாம் என்பதால் இதில் முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லையே.  வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எனது மெயிலுக்கோ அல்லது மொபைலுக்கோ தொடர்பு கொள்ளுங்கள் எனக்கு தெரிந்தவரை உதவி செய்கின்றேன்.
நன்றியுடன்
வீ.சக்திவேல்

Mail ID : sundarisakthi@gmail.com    Mobile No : 9942417526